January 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கீழப்பாவூர் பள்ளி மாணவியின் அசத்தல் யோசனை மத்திய அரசு அங்கீகாரம்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பாக ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் பத்து வகுப்பு வரை பயின்றுவரும் மாணவ மாணவியர்களில் புது முறை காணல் திட்டம் (கண்டுபிடிப்பு / innovation) inspire Award MANAK என்ற பெயரில் நடத்தி வருகிறது.
இப்போட்டியின் முதற்கட்டமாக நாடு முழுவதும் ஒரு இலட்சம் மாணவர்களின் புதிய யோசனைகளைத் தேர்ந்தெடுத்து அதை செயல்முறைப்படுத்தும் வகைக்கு முன்மாதிரியை செய்வதற்காக அவர்களுக்கு ரூபாய். 10,000/- (ரூபாய் பத்தாயிரம் ) வழங்கி ஊக்குவிக்கிறது.
இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 1371 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுனர். இதில் 1371 மாணவர்களில் கீழப்பாவூர், நாடார் இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி ச.ஸ்ரீதுர்காதேவி என்பார் தொடர்பு இல்லாத வெப்பமானி (Contactless thermometer) என்ற புதிய யோசனையை அங்கீகரித்து மத்திய அரசு இந்தத் தொகையை மாணவியின் வங்கிக் கணக்கு மூலமாக நேரடியாக வழங்கியுள்ளது.
இதன் அடுத்த நடவடிக்கையாக இந்த மாணவி இந்த தொகையைப் பயன்படுத்தி தன்னுடைய எண்ணத்தினை செயல்படுத்தும் விதமாக ஒரு மாதிரியை உருவாக்கி மாவட்ட அளவில் போட்டிக்கு பள்ளியின் முகவர் மற்றும் தலைமையாசிரியை திருமதி. பொ.மஞ்சுசெல்வம் அவர்களின் வழிகாட்டுதலில் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார்.
கீழப்பாவூர், நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி சார்பாக இந்த விருதினைப் பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட நான்காவது மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இதற்கு முன்பாக இதே விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மாணவியான செல்வி ச.ஸ்ரீராமரத்தின ராகவேந்திர ராணி என்பார் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அது மாவட்ட அளவிலான போட்டியில் சிறந்த படைப்பாக அறியப்பட்டு மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வானது.
இதற்கு முன்பாக 2015-16ம் கல்வியாண்டில் கீழப்பாவூர், நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதற்காக உழைத்திட்ட மாணவியை , பள்ளியின் முகவர் மற்றும் தலைமையாசிரியை திருமதி பொ.மஞ்சுசெல்வம், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை பள்ளியின் செயலர் திருமதி. சு.செல்லம்மாள் மற்றும் துணைச் செயலர் திரு.ஆ.பொ.ஆறுமுகசெல்வன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி உஷாராணி ஆகியோர் பாராட்டினர்.

error: Content is protected !!
Open chat