மதுரை மாவட்டத்தில் சாத்தையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.. பல்வேறு அமைப்புகளும்,
சாத்தையார் அணைக்கட்டு பாசன சங்கமும் இணைந்து பொதுப்பணித்துறை ஒப்புதலோடு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது :
மதுரை மாவட்டத்தில்
சாத்தையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது..
பதிமூன்று வருடங்கள் கழித்து அணைக்கட்டு நிரம்பி உள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
மேலும் அணைக்கு சிறுமலையில் இருந்து தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்களை இந்த முறை சாத்தையார் அணைக்கட்டு பாசன சங்க விவசாயிகள் இரவு பகல் பாராமல் கால்வாய்களை சுத்தப்படுத்தி தண்ணீரை அணைக்கு கொண்டுவந்துள்ளனர்… மேலும் மதுரை மாவட்ட நீர் மேலாண்மை, ஒளிரும் மதுரை மற்றும் சபரி கிரீன் பவுண்டேஷன் ( சென்னை )
ஆகிய அமைப்புகளின் வழிகாட்டுதல்படி இந்த அணைக்கு தண்ணீர் கொண்டுவர பட்டதற்கு
அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்..
மதுரை மாவட்ட நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சி.பி.ரவி.,
ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன்., சபரி கிரீன் பவுண்டேஷன் சுப்பிரமணி ஆகியோர் சாத்தியார் அணைக்கட்டு பாசன சங்க விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
மேலும் அணைக்கட்டிலிருந்து கண்மாய்களுக்கு வரக்கூடிய வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறை ஒப்புதலோடு சுத்தப்படுத்தும் பணியை மேற்கண்ட அமைப்புகளின் உதவியோடு சாத்தையாறு அணைக்கட்டு பாசன சங்க விவசாயிகள் செய்து கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டு வரப்பட்டது..
சாத்தையார் அணைக்கட்டு பாசனசங்க தலைவரும் கீழ சின்னணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ரமேஷன் அவர்கள் விவசாயிகளை ஒன்றிணைத்து இந்த பணிகளை செய்து கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு செல்லப்பட்டது..
மதுரை செய்தியாளர்
S.பெரியதுரை
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி