December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மதுரையை சேர்ந்த என்ஜினீயர் நைஜீரியாவில் திடீர் மரணம்

மதுரையை சேர்ந்த
என்ஜினீயர் நைஜீரியாவில்
திடீர் மரணம்

உடலை தாயகம் கொண்டு வரமுடியுமாமல்
உறவினர்கள் அவதி!

உதவி கேட்டு
முதல்வர் பழனிச்சாமி,
வைகோவிடம்
முறையீடு!!

சென்னை
07.01.2021

மதுரை, எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் செந்தூர் வேலன்( வயது 52) பி. இ. பட்டதாரியான இவர் நைஜீரியாவில் உள்ள ஓர் எரிசக்தி நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

ஒரு மாத விடுமுறையில் மதுரை வந்து தங்கியிருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் நைஜீரியா சென்று பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று(06.01.21) மதியம் நைஜீரியாவில் அவர் வேலை பார்த்த‌ நிறுவனத்திலிருந்து, இவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது.

மாரடைப்பில் இறந்ததாகவும் கொரோனா தொற்று இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இவர் மனைவி தவமணி(48).மகன் அஜய்குரு, சேலம் கற்பக விநாயகா கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு நடித்துவருகிறார்.

அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவருடைய உடலை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டது.

அந்த நிறுவனமோ தூதரக உதவி கிடைக்கவில்லை.
நீங்கள் நைஜீரியா வந்து தகனம் செய்யுங்கள் என்று மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது.

இடிந்து போயுள்ள குடும்பத்தினர் செந்தூரின் உடலை மதுரைக்கு கொண்டு வர அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்துதரும்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கைமனு கொடுத்துள்ளனர் .

வைகோவிடமும்
கோரிக்கை.

மறைந்த செந்தூர் வேலன் உடலை தாயகம் எடுத்து வர உதவி செய்யும்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,எம்.பி.யிடமும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
(முருகன் 9444006357 (செந்தூர் வேலன் சகோதரர்)

error: Content is protected !!
Open chat