கொரானாவும் தடுப்பூசியும் !
ஜனவரி 14 முதல் இந்தியாவில் கொரானா தடுப்பூசி பயன்பாட்டிற்க்கு வருவதாக தகவல் அறிந்தேன்.
அதற்க்கா இந்திய அரசும் முழு அனுமதி வழங்கியிருப்பதாகவும் தகவல் அறிந்தேன்.
தடுப்பூசி செயல்பாட்டிற்க்கு வருவதற்க்கு முன்பு முதல் ஊசியை இந்தியாவின் மூத்த குடிமகன் மதிப்பிற்குறிய குடியரசு தலைவர் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். குடியரசு தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
அடுத்த ஊசி பாரத பிரதமர் அவர்களுக்கும் அவருடன் இருக்கும் மத்திய அமைச்சர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
அதன்பிறகு அனைத்து மாநில ஆளுநர்கள் , முதலமைச்சர்கள், அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கும் நாடு முழுவதும் உள்ள அணைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாச்சியர் அவர்களுக்கும், அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு முழுமையாக கொரானா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
அதன்பிறகு
இவர்களுக்கு எல்லாம் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதி செய்த பிறகு பொது மக்களுக்கு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.
தடுப்பூசி போடும் மருத்துவர்கள்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
இவர்களுக்கு கொரானா தடுப்பூசி உறுதிப்படுத்தாமல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராதீர்கள்.
அன்புடன்
உங்களில் நான்
வெண்மணி வரதராஜன்
வேப்பூர் ஒன்றியம்
குன்னம் சட்டமன்றம்
பெரம்பலூர் மாவட்டம்.
More Stories
சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
நேதாஜி சிலைக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் மரியாதை செலுத்தினார்
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்