கொரோனாஉலக அளவில் 1,905,088 பேர் பலியாகியுள்ளனர்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,905,088 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 88,449,474
பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 63,572,751 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,189 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Continue Reading
Next நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் விளங்கும்’ என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது. குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் கூறியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக விளங்கும். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணியில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்பு கள், நிதி வசூலிக்கும். தனிப்பட்ட நபரிடம், 10 ரூபாயும், ஒரு குடும்பத்திடம், 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்து உள்ளோம். மொழி, ஜாதி, பிறப்பு ஆகியவற்றால், ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று; அனைவரும் சரிசமமானவர்கள்’ என, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், மக்களிடம் பிரசாரம் செய்வர். கூட்டுக் குடும்பமாக வாழும், ஹிந்து கலாசாரத்தின் பெருமையை, மக்களிடம் எடுத்துக் கூறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. ஏனெனில், நாட்டில், கூட்டுக் குடும்ப வாழ்க்கை மறைந்து வருகிறது. குடும்பங்கள் உடைவது, சமூகத்துக்கு நல்லதல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.
More Stories
மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது-கமல்ஹாசன்
அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது