December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ‘அந்தமானின் அதிசயங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் அரிமா K.கௌதமன் தலைமை வகித்தார். முன்னாள் சங்கச்செயலாளர் அரிமா D.ஞானசெல்வன், அரிமா A.ராஜேந்திரன், அரிமா D.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் அரிமா R.கலைச்செல்வன் வரவேற்றார்.
அரிமா மாவட்டத்தலைவரும், கண்தான விழிப்புணர்வுக்குழு நிறுவனருமான K.R.P.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். ‘அந்தமானின் அதிசயங்கள்” என்ற நூலை முனைவர் த.அருணாசலம் எழுதி வெளியிட்டார். முதல் பிரதியை அரிமா சங்கத்தலைவர் K.கௌதமன் பெற்றுக்கொண்டார். இந்த நூலினை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
விழாவில் புத்தாண்டு, தமிழர் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் சங்கப்பொருளாளர் அரிமா T.சுரேஷ் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat