சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீ விபத்து
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசம்.பல கோடி ரூபாய் இழப்பு.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த சில வாரங்களாக திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சபரிமலை மண்டல மகரவிளக்கு காலங்களில் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டும். சபரிமலை செல்லும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்துவிட்டுதான் திரும்புவார்கள். இதனால், நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 20-ம் தேதிவரை கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா நோய்த் தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கன்னியாகுமரியிலும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டதால் கடற்கரையில் கடை விரித்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
தீயணைக்கும் பணிதீயணைக்கும் பணி
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் நெருக்கமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்புக் கம்பி, தகர ஷீட்கள் மூலம் நூற்றுக்கணக்கான கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காரப் பொருட்கள், பேன்சி பொருட்கள், நறுமணப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணி வகைகள் என பலவகை கடைகள் கன்னியாகுமரி கடற்கரையில் நெருக்கமாக உள்ளன
More Stories
அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது
பள்ளி தோழிகள் ஒரே சமயத்தில் உயிர் இழப்பு