முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்
இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டது. இலங்கை அரசு இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வீர மரணம் அடைந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூண் இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அத்தனை தமிழர்களின் மனதையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், நினைவு சின்னத்தை அகற்றுவது என்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல். ஆகவே, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
More Stories
அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது
பள்ளி தோழிகள் ஒரே சமயத்தில் உயிர் இழப்பு