January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 20 குடும்பங்களுக்கு உதவி

 

முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 20 குடும்பங்களுக்கு உதவி

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையார்குளம் வீதியைச் சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் எர்த் கம்பியை தொட்டதில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கீழப்பூவாணி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமலட்சுமி என்பவரின் கணவர் லெட்சுமண பெருமாள் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கோயில்திருமாளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன்கள் இளையராஜா, இளவரசன் மற்றும் கைலாசம் என்பவரின் மகன் பாரி ஆகிய மூன்று நபர்களும் மழைநீர் கசிவினை சரிசெய்யும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சீத்தாராமன் என்பவர் வயல் வெளிக்குச் சென்ற போது, மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கடவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் திரு. சாமித்துரை என்பவர்
எதிர்பாராத விதமாக மின்கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராஜாப்பிரியா என்பவரின் கணவர் கணேசன் என்பவர் மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், கீரின்வேல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் வயல் வெளிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

ஊத்துக்கோட்டை வட்டம், பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி திருமதி மீனு என்கிற மீனா என்பவர் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

தருபபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கமல்ராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்,

இராணிப்பேட்டை பாவட்டம், வாலாஜா வட்டம், மஹாவீர் நகரைச் சேர்ந்த திருமதி மாலா என்பவரின் கணவர் வாசுதேவன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகள் பிரபாகரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்
குன்றத்தூர் வட்டம், மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. பலராமன் என்பவரின் மகன் ராஜேஷ் என்பவர் மேய்ச்சல் பகுதியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

உத்திரமேரூர் வட்டம் இளநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு, பச்சையப்பன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, கன்னியப்பன் ஆகிய இருவரும் சாலை அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், காலா கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி திருமதி ராஜேஸ்வரி என்பவர் வெளியே சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஞானப்பழம் என்பவரின் கணவர் திரு தர்மலிங்கம் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பெண்ணேஸ்வரமடம் கிராமத்தைச் சேர்ந்த சுரியன் (எ) கோவிந்தன் என்பவரின் மகன் சென்றாயன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் திரு ஹேமச்சந்திரன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது, மின்கம்பம் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்
பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!
Open chat