கேப் சிட்டி கல்லூரி மாணவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் செயல்பட்டுவரும் கேப் சிட்டி பாராமெடிக்கல் கல்லூரி அரசு அனுமதியின்றி செயல்படுவதாகவும், கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில்.இரணியல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியை இழுத்து மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசு கல்லூரியில் இடம் கொடுக்கவேண்டும், பள்ளி அசல் சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் எதிர் மனுதாரர்கள் 2 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், இரணியல் காவல் நிலையம் கேப் சிட்டி கல்லூரி முன்பு ஆகிய இடங்களில் தொடர் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இறுதியாக இரணியல் காவல் நிலையத்தில் காவல்துறையினர் மாணவிகளை மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் கொடுத்த புகார் மனுவை வாங்க மறுத்ததோடு மிரட்டி கையெழுத்து பெற்று கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாகவும் காவல்துறை மற்றும் அரசு மீது அதிருப்தி தெரிவித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு தற்போது தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
More Stories
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்
சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்