கோவிட் 19 சிறப்பு உதவி தொகை தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்
தென்காசி மாவட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டத்;தின் கீழ் கோவிட்-19 சிறப்பு நிதி உதவித்தொகுப்பின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.10 இலட்சம் கடனுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டத்;தின் கீழ் கோவிட்-19 சிறப்பு நிதி உதவித்தொகுப்பின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.10 இலட்சம் கடனுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன்,இ.ஆ.ப., வழங்கினார்கள்.
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ் நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களைச் சார்ந்த 44 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டத்;தின் கீழ் கோவிட்-19 சிறப்பு நிதி உதவித்தொகுப்பின் கீழ் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி-கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 8 பயனாளிகளுக்கும், கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த 2 இளைஞர்களுக்கும் ஆக மொத்தம் 10 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம்; ரூ.10 இலட்சம் கடனுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திருமதி.சுதாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.விஷ்ணுவர்தன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் திரு.சோமசுந்தரம், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட செயல் அலுவலர்; திரு.வேல்முருகன் மற்றும் கடையம் வட்டார அணித்தலைவர் திரு.ஜோசப் சிரீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை