December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வைகோ வரவேற்பு

வேளாண் சட்டங்களுக்கு
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

வைகோ வரவேற்பு

 

வேளாண் சட்டங்களுக்கு
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

வைகோ வரவேற்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் பலி ஆகி உள்ளனர்.

மத்திய அரசுடன் 8 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து, விவாதித்து நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இச்சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனை மறுத்தால் நாங்கள் இச்சட்டங்களுக்குத் தடை விதிப்போம் என்று கூறினர்.

மேலும் இச்சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இன்று, உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது.

மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை – 8
12.01.2021

error: Content is protected !!
Open chat