January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மாணவர் அமைப்பின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

 

மாணவர் அமைப்பின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

 

பாவூர்சத்திரத்தில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மண்டலப் பொறுப்பாளர் ஆசிரியர் செந்தமிழ் அரசு தலைமை தாங்கினார். மாணவத் தலைவர் பொன்மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தர் விரும்பிய 100 இளைஞர்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் செந்தமிழ் அரசு பேசினர். நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் .பாவூர்சத்திரம் பகுதியில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வரும் கல்வியாண்டில் தொடங்க வேண்டும்.

பாவூர்சத்திரத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.தங்க கவின் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat