பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் பொங்கல் விழா பள்ளியில் மாணவர்களின் கோலப்போட்டிகளுடன் பரிசுகள் வழங்கி மகிழ்வாக நடைபெறும்.இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களுக்கு விடுமுறையாதலால் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் சமைத்து பொங்கலை கொண்டாடினார்கள்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,கருப்பையா அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் பொங்கி தை பொங்கலை கொண்டாடினார்கள்.
More Stories
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
அம்மா மினி க்ளினிக்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைக்கிறார்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை?