குற்றாலஅருவியில் குளிக்க அனுமதி இல்லை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவே மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் 13.01.21 முதல் 17.01.21 வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் நீர்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம் எனவும் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கன மழையினை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்
More Stories
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்