மலைவாழ் மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டத்தில் கல்வி சுடர் அறக்கட்டளை மற்றும்
ஏபிஜே அப்துல் கலாம் பொதுநல சேவை இணைந்து மலைவாழ் மக்களுடன் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
கல்வி சுடர் அறக்கட்டளை மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.. மேலும் இந்நிகழ்வில்
உயர்திரு.காவல் ஆய்வாளர் க. ஆடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் கல்வி சுடர் அறக்கட்டளை மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு இணைந்து தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கருப்பாநதி அணை மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் களுடன் சமத்துவ பொங்கல் வைத்தும் மற்றும் மலைவாழ் மக்களுக்கு மதிய உணவு வழங்கியும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது… மேலும் மழைவாழ் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது…
இந்நிகழ்வில்
கல்விச் சுடர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் .,
ஏபிஜே அப்துல் கலாம் பொது நல சேவையின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
More Stories
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ட்வீட்
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்