January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் மனசாட்சியற்ற செயல் டிடிவி குற்றச்சாட்டு

பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது  அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்   என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat