January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

 

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது .
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு  தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரும்பு,  மஞ்சள்குலை  உள்ளிட்ட பொருட்கள் படைக்கப்பட்டு  பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பனை ஓலையை பயன்படுத்தி ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர்கள் பொங்கலிட்டனர்.
பொங்கல் பானை பொங்கிய போது பொங்கலோ பொங்கல் என்று ஆட்சியர் அலுவலக அனைத்து ஊழியர்களும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்,  காவல்துறையினர்,   வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!
Open chat