ஆதரவற்றோர்களுடன் விழித்திடு விதைத்திடு-வின் ஒரு பொங்கல் கொண்டாட்டம்
ஆதரவற்றோர்களுடன் விழித்திடு விதைத்திடு-வின் ஒரு பொங்கல் கொண்டாட்டம் :
தென்காசி மாவட்டத்தில் கருத்தபிள்ளையூர் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.. மேலும் விழித்திடு விதைத்திடு அமைப்பின் நண்பர்கள் சுமார் 15 நபர்களுடன் இல்லத்திற்கு தேவையான போர்வைகள்,புடவைகள்,நைட்டி,சட்டை,கைலி,சிறுவர் மற்றும் சிறுமியருக்கு உடைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.. மேலும் காலை பொங்கல் செய்து அனைவருக்கும் உண்டு மகிழ்ந்தனர்..பின்பு மதியம் உணவு செய்து அனைவருக்கும் உணவு வழங்கி பொங்கல் விழாவை சிறப்பித்தனர்..
இவ்விழாவில் அன்னை தெரசா முதியோர் இல்ல தாத்தா பாட்டிகள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய
அன்பை பகிர்ந்து கொண்டு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய அமைப்பிற்கு தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்…
மதுரை செய்தியாளர்
S.பெரியதுரை
More Stories
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை