January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இணையத்தில் பிழை திருத்தும் மென்பொருள் அசத்திய தமிழன்

இணையத்தில் பிழை திருத்தும் மென்பொருள் அசத்திய தமிழன்

இந்திய மொழிகளிலேயே இணையத்தில் செழுமையான பிழைதிருத்தி மென்பொருள் தமிழுக்கு மட்டுமே உள்ளது அதனை உருவாக்கிய நீச்சல்காரன் என அறியப்படும் திரு சே. இராஜாராமன் என்ற இளைஞருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவர் ஜெய்ஹிந்த்புரம் கே.ஏ.சி.ஏ. அருணாச்சலம் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் திருப்பாலை யாதவர் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்து பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸில் பணி புரிந்து வருகிறார்.

தட்டச்சு செய்யும் போது நாம் அறிந்தோ அறியாமோ ஏற்படும் எழுத்துப் பிழைகளைக் கணினி மென்பொருள் வழியாகக் கலைந்து கொள்ளமுடியும். அதற்கு அந்த மொழி அறிவைக் கணினிக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். பொதுவாக மைரோசாப்ட் வேர்ட், கூகிளின் ஜிமெயில் போன்ற மென்பொருட்களில் ஆங்கிலத்தில் அடிக்கும் போது இந்த வசதியை நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால் தமிழுக்கு அவ்வாறான ஒரு மென்பொருளை இம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கவில்லை காரணம் தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு வளமான சொல்வளம் இருப்பதால் கணினிக்குக் கற்றுக் கொடுப்பது சவாலான காரியம். அத்தகைய மென்பொருளைத் தான் கடந்த நான்காண்டுகளாக ஆய்வு செய்து நீச்சல்காரன் உருவாக்கியுள்ளார்.

இதன் பயனறிந்து அப்போதைய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. மேசைக் கணினிக்கான மென்பொருளைத் தமிழக அரசிற்கு உருவாக்கக் கேட்டார். அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு தமிழிணைய பிழைதிருத்தி என்ற புது மென்பொருளை முதல்வர் திரு கே. பழனிச்சாமி வெளியிட்டார்.

2010 இல் இணையத்தில் வலைப்பதிவாக எழுதத் தொடங்கிய இவரின் எழுத்துப் பயணம், பின்னர் பல அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இன்று வரை நீண்டுகொண்டுள்ளது. பன்னாட்டு இதழான வலைத்தமிழின் ஆசிரியர் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவர்.

இவரின் எழுத்துப் பயணத்துடன் மொழிக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளைச் செய்யத் தொடங்கினார். “நாவி” என்ற சந்திப் பிழை திருத்தி, “ஓவன்” என்ற எழுத்து மாற்றி, “சுளகு” என்ற சொல்லாய்வுக் கருவி, “வாணி” என்ற எழுத்துப் பிழை திருத்தி மற்றும் சமீபத்தில் உருவாக்கிவரும் “பேச்சி” என்ற எந்திர மொழிபெயர்ப்புக் கருவி என்று பல செயலிகளை இலவசமாக இணையம் வழியாக வெளியிட்டுள்ளார். அதற்காக 2015 ஆம் ஆண்டு கனடா நாட்டிலுள்ள இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு கணிமை விருதினை இவருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தமிழ் மென்பொருட்கள் அனைத்து இணையம் வழியாக யாரும் பயன்படுத்தலாம்.

மென்பொருளாக்கம் மட்டுமின்றி கணித்தமிழ் பயிற்சிகளையும் பல்வேறு கல்லூரிகளில் அளித்துவருகிறார். இதுவரை இணையத்தமிழ், விக்கிப்பீடியா, நிரலாக்கம் தொடர்பாக தமிழகம் முழுக்க இருபதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

error: Content is protected !!
Open chat