பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் நலச்சங்க தென்காசி மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மோதிலால் நேரு, பள்ளி தாளாளர் லதாராஜகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்
இலஞ்சிகுமரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சதீஸ், தென்மண்டல செயலாளர், ந.ஆனந்தக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்கினர். சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து அவர்கள்நன்றிகூறினார்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்