மழை பாதிப்புக்கு இழப்பீடு வேண்டும்
திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூர் கிராமத்தில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதை கண்டித்து ஓலையூர் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓலையூர் மற்றும் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. உடனடியாக அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் அருமை ராஜ், பிரதிநிதி கார்த்தி, தினேஷ் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது