சமூக விலகலை பராமரிக்காமல் இருந்து விடாதீர்கள்-பிரதமர் மோடி
முதல் டோஸ் போட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்துவிடாதீர்: பிரதமர் மோடி
டெல்லி:
”முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்து விடாதீர்கள்,” என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது:
இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே இன்று பாராட்டுகிறது. முதல் கொரோனா தடுப்பூசி டோஸ் பெற்றபின் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்து விடாதீர்கள். முகக் கவசங்களையும் அகற்றக் கூடாது.
ஏனெனில் இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை. வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது.
அடுத்த 2 அல்லது 4 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் தயாராரகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைந்தவை. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்