அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
தென் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மதுரை உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களில் கல்யாணம் ,காதுகுத்து, புதுமனை புகுவிழா இப்படி ஏதாவது விசேஷம் என்றால் அங்கு அவர்கள் வைக்கும் கறிவிருந்து தாண்டி அங்கு நடக்கும் மொய் தான் அந்த விழாவின் பெயர் சொல்லும்
தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அவர்கள் எவ்வளவு மொய் செய்தார்கள் என்று பார்த்து அதை விடவும் கூடுதலாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் கல்யாண மண்டபம் , கோவில் வீடு என்றாலும் சரிவிழா நடக்கும் இடம் எதுவானாலும் பெண் ,மாப்பிள்ளை வீட்டார் மொய் நோட்டுப் வைத்துக்கொண்டு எழுதிக் கொண்டிருப்பார்கள் அதிலும் மதுரை பகுதியில் அவர்கள் செய்யும் மொய்யினை மைக்கில் அறிவிக்கும் அளவுக்கு புகழ் பெற்றது அண்மையில் மதுரை மாவட்டங்களில் மொய் வசூல் செய்வதற்கு என தனியாக ஒரு நிறுவனம் வசூல் செய்து அதை
ஊர் வாரியாக தொகை வாரியாக பிரித்து பட்டியலிட்டு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் இந்நிலையில் இன்று பெங்களூர் கணினி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை சரவணன் என்பவருக்கும் நடைபெற்ற திருமண விழாவில் கொரொனா காலம் என்பதால் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு டிஜிட்டல் முறையில் GPAY ,PHONEPE முறையில் செலுத்தும் வகையில் பத்திரிக்கையில் QR CODE பிரிண்ட் செய்து அனைவருக்கும் வழங்கி இருந்தார்கள் மேலும் விழாவிற்கு வந்த இடத்திலும் அதற்கென அமைக்கப்பட்ட கோ QR கோடுடன் கூடிய அமைப்பையும் ஏற்படுத்தி செய்திருந்தனர்
தங்கள் போனில் கூகுள் பே போன் பே வைத்திருந்தவர்கள் எளிதாக மொய் செய்துவிட்டு நகர்ந்து விட்டனர் ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் பழைய முறைப்படி மொய் எழுதவும் செய்துவிட்டனர் காலத்திற்கேற்ப மாற்றம் என்பதை இந்த திருமண வீடு உறுதிசெய்துள்ளது
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்