பள்ளி வகுப்பறையை ஆய்வு செய்தார் ஆட்சியர்
தென்காசி மாவட்டம்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் வகுப்பறையை
மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் வகுப்பறைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.01.2021) ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
தமிழக அரசின் அறிவுரைப்படி முறையான வழிகாட்டுதலுடன் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 241 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 21,148 – 10-ஆம் வகுப்பு மாணவர், மாணவியர்களும், 16,930 – 12-ஆம் வகுப்பு மாணவர், மாணவியர்களும், இன்று முதல் பள்ளியில் நேரடியாக பயிலும் வகையில் பள்ளிகல்வித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவியர்கள்; பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
மாணவ, மாணவியர்களின் நலன் கருதி அரசு வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து பள்ளிகளையும் மாஸ் கிளினிக் செய்ததுடன் இன்று முதல் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைக்கான வெப்பமானி மூலம் பரிசோதனை மற்றும் கைகளுக்கு கிருமிநாசினி மருந்து வழங்குதல் அதைத்தொடர்நது முகக்கவசம் வழங்கும் பணி என ஒவ்வொரு பணிக்கும் ஆசிரியர் குழு நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வகுப்பறைக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு வகுப்பறையில் 25 நபர்களுக்கு மட்டும் இருக்கை வசதி மேற்கொள்ளப்படுவதுடன், ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு நாற்காலிகளிலும் சமூக இடைவெளி விட்டு இருவர் மட்டும் அமரும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் நேரடியாக சத்து மாத்திரை வழங்கி அப்பொழுதே உண்ணவும்
அறிவுறுத்தப்பட்டதுடன், உணவு இடைவேளை மற்றும் பள்ளிக்கு வரும் பொழுதும் வீட்டிற்கு செல்லும் போதும் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து முககவசத்துடனே வகுப்பறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரிகளும், பள்ளி ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களை நல்லமுறையில் கண்காணித்து எல்லோரும் பாதுகாப்புடன் இருந்து பள்ளிகளுக்கு சென்று வர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்; மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்