பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் ரெய்டு!
சென்னை பாரிமுனை, அடையாறு, காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஏசு அழைக்கிறார் என்று பால் தினகரன் நடத்தி வரும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
இவரது தந்தை டிஜிஎஸ் தினகரன் தான் இயேசு அழைக்கிறார் அமைப்பை தொடங்கினார். தினகரன். மத போதனையிலும் ஈடுபடத் தொடங்கினார். திருமணத்திற்குப் பின் மனைவி ஸ்டெல்லாவுடன் இணைந்து பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தினார். அவர்களது வழியில் தான் அவரது மகனான பால் தினகரனும் சிறப்புப் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
பால் தினகரன் தற்போது காருண்யா பல்கலைக்கழகத்தின் தாளாளராக உள்ளார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்