சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மொரார்ஜி தேசாய்க்கு பின் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, மோடியின் பெயரை, உள்துறை அமைச்சர் பரிந்துரை செய்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக மோடி உள்ளார்.
அறக்கட்டளை உறுப்பினர்களாக, அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கோல்கட்டாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான அம்புஜா நியோடியா நிறுவன சேர்மன் ஹர்ஷ்வர்தன் நியோடியா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலர் பிரவின் லஹரி, ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் வராவல், ஜீவன் பர்மர் ஆகியோர், உள்ளனர். இந்த அறக்கட்டளை உறுப்பினர் பதவிக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 4 பேரை பரிந்துரை செய்ய முடியும்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்