குறைகளை தீர்க்க தென்காசி ஆட்சியர் வாட்ஸ்அப் செயலி எண் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் ஆப் செயலி எண்(7305089504) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்; கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் ஆப் செயலி எண்;(7305089504) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கு ஏதுவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனுதாரர்களின் கால விரையம், வீண் செலவு மற்றும் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு நேரடியாக தெரிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.
எனவே பொதுமக்கள் இதன் மூலம் தனிநபர் மற்றும் பொதுவான கோரிக்கைகளை மனுவாகவோ, புகைப்படமாகவோ, குரல் வழி செய்தியாகவோ இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார்
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்