சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் கோர்ட்டால் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. ஆனால் சசிகலா ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை தனிக்கோர்ட்டில் செலுத்தினார். விடுதலை ஆகும் நாள் நெருங்கிவிட்டது ஆனால் அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை நிர்வாகம் கடந்த 20-ந் தேதி பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தது.
மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. 4 லிட்டர் சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை
ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார்.
சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது.
சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார்.
ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து கொடுக்கப்படுகிறது.
சசிகலாவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்