January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வன்னியர் இடஒதுக்கீடு: அ.தி.மு.க. திட்டவட்டம்

வன்னியர் இடஒதுக்கீடு அ.தி.மு.க. திட்டவட்டம்

பா.ம.க.வுக்கு 35 சீட் அடுத்த வாரம் பா.ஜ.க வுடன் பேச்சு

திரிசங்கு நிலையில் தே.மு.தி.க.

வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிகபட்சமாக தேர்தல் அறிக்கையில் மட்டுமே சேர்க்க முடியும் என அ.தி.மு.க. தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் கூட்டணி தொடர்பான அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலையில் பா.ம.க. உள்ளது. தே.மு.தி.க. திரிசங்கு நிலையில் உள்ளது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. இடம்பெற்றுள்ளது. பா.ஜ.க. தரப்பில் 60 தொகுதிகள் கேட்கப்பட்டது. அத்துடன் டெல்லி தலைவர்களுடன் தான் அ.தி.மு.க.வால் இதுபற்றி பேச முடியும்.

இதனால் பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தினர். பா.ம.க.வைப் பொறுத்தவரை முதலில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரியது. தமிழக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் எம்.பி.சி. கோட்டாவில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தேவை என பா.ம.க. இறங்கி வந்தது.

இது தொடர்பாகவும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. பா.ம.க., அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மிக அதிகபட்சமாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்தான் இந்த கோரிக்கையை சேர்க்க முடியும் என சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இதுதான் அ.தி.மு.க.வின் நிலை எனவும் தெளிவாக சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து பா.ம.க. தான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. 35 தொகுதிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. தரப்போ அதிகபட்சமாக 25 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க.- பா.ம.க. இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு தொடர்பானதாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் கிஷ்ண ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் அடுத்த வாரம் தமிழகம் வருகை தருகின்றனர். முதல் கட்டமாக அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகளோ அதே எண்ணிக்கை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க. தரப்பு நெருக்கடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

பா.ஜ.க., பா.ம.க.வுக்கு பந்தி வைத்தது போக எஞ்சிய தொகுதிகள் தான் தே.மு.தி.க.வுக்கு என்கிற நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது. தே.மு.தி.க.வோ 41 தொகுதிகள் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு இம்முறை அ.தி.மு.க. அணியில் 9 தொகுதிகளுக்குதான் வாய்ப்பு எனவும் அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் தே.மு.தி.க. விழிபிதுங்கி கொண்டிருக்கிறது.

error: Content is protected !!
Open chat