April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் பள்ளி மாணவி முத்துஅபிராமி

செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் திட்டத்திற்கு பள்ளி மாணவி தேர்வு.

செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் திட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் பள்ளி மாணவி தேர்வு.

ராமேஸ்வரத்தில் நாளை( 7ஆம் தேதி) நடைபெறும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் திட்டத்திற்கு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் பள்ளி மாணவி முத்துஅபிராமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு தினத்தை ஒட்டி நாளை அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்களை ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளனர்

நல்லோர் வட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்தது. இதில் நெல்லை மாவட்டம் நல்லோர் வட்டம் சார்பில் விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் காசி விஸ்வநாதனின் மகள் முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட மாணவியை பள்ளி தாளாளர் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினார்கள்.

error: Content is protected !!
Open chat