திமுக தலைவர் ஆணைக்கிணங்க வருகிற 22-ஆம் தேதி திங்கள்கிழமைகாலை 9 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி N.சிவா MP பங்கேற்பு.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற பெட்ரோல், டீசல்,. , மற்றும் கேஸ் ,ஆகியஅத்தியாவசிய பொருட்கள் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகும். இதன் விலை உயர்வு தினம், தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக அங்கம் வகித்த கூட்டணி அரசு மத்தியில் இருந்த பொழுது 375 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை இன்று 900 ரூபாயை எட்டி இருக்கிறது அதேபோல பெட்ரோல் டீசல் விலையும் தினம் தினம் கூட்டப்பட்டுகிறது. விலை விரைவில் ரூ100 யை எட்டும் நிலையில் உள்ளது. கேட்டால் பெட்ரோல் நிறுவனம் தனியார் நிர்வகித்து வருகிறது என்றும் மத்திய அரசு மழுப்பலான பதிலை தருகிறது. மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதனை மாநிலத்தில் இருக்கிற அரசு அதிமுகஅப்படியே ஏற்றுக் கொள்கிறது.
இதனை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளார்.எனவே வருகிற 22-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழகத்தினுடைய பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற இருக்கிறது அந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி N.சிவா வருகை தர இருக்கிறார்
ஆகையால் மாநில கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய ,நகர, பேரூர், கழகத்தின் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய ,நகர, பேரூர் ,அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், வார்டு கழக செயலாளர்கள் பிரதிநிதிகள், மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், தாய்மார்கள், பெண்கள், அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என தென்காசிமாவட்ட திமுக பொறுப்பாளர்
பொ.சிவபத்மநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
More Stories
காவல்துறை மரியாதையுடன் நடந்த விவேக்கின் இறுதிஊர்வலம்!
விவேக்கிற்காக கண்ணீர் விட்டு அழுத வடிவேல்!
கும்பமேளா: பிரதமர் மோடி கோரிக்கை!