January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி காவல்துறையினருக்கு நவீன ரக கேமராக்களை வழங்கப்பட்டது 

திருநெல்வேலி காவல்துறையினருக்கு நவீன ரக கேமராக்களை வழங்கப்பட்டது 

 

காவல்துறையினருக்கு மூன்றாவது கண்ணாக உடலில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு உடலில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை (Body Worn Camera) வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க உடலில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை (Body Worn Camera) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப.., அவர்கள் வழங்கினார்கள்.

இந்த கேமராக்களை காவல்துறையினர், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவற்றை பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.

காவல்துறையினர் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி, களக்காடு, சுத்தமல்லி, வள்ளியூர் ஆகிய ஐந்து காவல்நிலையங்களிலும் மூன்று கேமராக்கள் விதம் 15 கேமரா வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat