சேலம் வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்தது 30 பேர் படுகாயம்
வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரியகிருஷ்ணாபுரம் குடுவாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிராமப்புற மக்கள் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்