பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை மனு
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்
பணியிடங்களுக்கான பொதுமாறுதல் நடத்திய பின்பு பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான பதவி உயர்வுகளை நடத்த வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு இடையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பினால் பல ஆண்டுகளாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே 19-2-2021 அன்று மதுரை உயர் நீதிமன்றம் உயர் நிலைப் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி விட்டு, பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வை நடத்துங்கள் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் 20-2-2021 இல் நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது, மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பிற துறைகளில் தாங்கள் விரும்பிய மாவட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்