சுவர்சித்திரம் சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது
கீழப்பாவூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக 6 – ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிகளில் 6,7,8 மாணவர்களுக்கான சுவர்சித்திரம் வரையும் போட்டி நடைப்பெற்றது. ஓவ்வொரு பள்ளியிலும் சிறப்பான முறையில் வரைந்த 5-மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கு பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் காசோலையாக வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.600, இரண்டாம் பரிசாக ரூ.500 , மூன்றாம பரிசாக ரூ.400 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் .வில்சன் சத்தியராஜ் காசோலை வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.குமாரி லதா மற்றும் ஆசிரியர்கள் ; பயிற்றுநர்கள்பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டனர் போட்டிக்கான ஏற்பாட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் கள், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்களின் தனித்திறமையையும், தன்னம்பிக்கையும் வெளிப்படும் விதமாக அமைந்தது. போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு வட்டார வளமையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தொரிவிக்கப்பட்டது.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்