March 9, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

தமிழக அரசின் பட்ஜெட் வேதனை அளிக்கிறது சமக தலைவர் சரத்குமார் 

தமிழக அரசின் பட்ஜெட் வேதனை அளிக்கிறது சமக தலைவர் சரத்குமார் 

தமிழக பட்ஜெட் – 2021

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் நடப்பு சட்டப்பேரவையின் இறுதி பட்ஜெட்டை இன்று துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்ததில்

தமிழகத்தின் வருவாய் ரூ.1,33,530 கோடியாகவும், செலவு ரூ.2,46,694 கோடியாகவும் அறிவித்திருந்தார். ஆனால், நிலுவையிலுள்ள மொத்த கடன் ரூ.5,70,108.29 கோடி என்ற அறிவிப்பு வேதனையளிக்கிறது

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218.58 கோடியும் வேளாண்துறைக்கு ரூ.11,928.71 கோடியும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடியும், ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.13,967 கோடியும், காவல் துறைக்கு ரூ.9567 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த நிதியாண்டின் வருவாயை விட ரூ.1,08,071 கோடி வருவாய் குறைந்துள்ளது என்றாலும் கடன் தொகை 1 கோடிக்கு மேலாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது

தமிழகத்தின் கடன் தொகை அதிகரிப்பானது, எதிர்காலத்தில் தமிழகத்தின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் கூடுதல் சுமையை உண்டாக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு நிதிநிர்வாகத்தை கடன்நெருக்கடியின்றி திறம்பட கையாள வேண்டும் என்ற அவசியத்தை உணர வேண்டும்.

கொரோனா தொற்று பரவலால் நிதி நிர்வாகம் பெரும் சவாலை சந்திக்கிறது எனும்போது மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரி வருவாய் பங்கினை பாரத பிரதமர் நேரில் வரும்போது உரிய அழுத்தம் கொடுத்து கேட்டு பெற்று, தமிழகத்தின் நிதிநிலைமையை சீர்செய்வதற்கான முயற்சியை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எல் ஐ.சி மற்றும் யுனைடட் இந்தியா ஆகிய இரு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, அரசு சார்பில் மக்களுக்குக்காக புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது

இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகளை வெளியிட முடியாத அளவில் மாநில அரசு இருப்பது புரிகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான வரியை அசாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் குறைத்து வரும் போது தமிழக அரசும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தால் வரவேற்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என சமக தலைவர் சரத்குமார் தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார் 

error: Content is protected !!
Open chat