மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மரணம் போலீஸ் விசாரணை
பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநடானூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் செல்லையா கூலித்தொழிலாளி ஆவார், அவரது மனைவி அருள்சீனி (வயது 53). இவரும் கூலித் தொழில் செய்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி அருள்சீனி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள்சீனி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்