April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பிரசாந்த் கிஷோர் ஐடியா ஸ்டாலின் எடுத்த முடிவு அட்ராசக்க.

பிரசாந்த் கிஷோர் ஐடியா ஸ்டாலின் எடுத்த முடிவு அட்ராசக்க.

இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாராம் ஸ்டாலின்! பரவால PK -வை சும்மா சொல்லக்கூடாது.. நல்லாத்தான் ஐடியா கொடுத்து இருக்காரு!

வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக தீர்க்கமாகமான முடிவை எடுத்து அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கு.அதே வேளையில் வரும் தேர்தலில் எந்தெந்த விஷயங்களில் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என பார்க்கும் போது எதிர்கட்சிகளின், பலத்தை காட்டிலும், திமுகவில் நடைப்பெறும் உள்குத்தே பெரும் பிரச்சனையாக உருவாக வாய்ப்பு இருக்கு என பிரஷாந்த் கிஷோர் டீம் ஓர் அறிக்கையை ஸ்டாலினிடம் சொல்ல, அவரோ அப்படியே பண்ணிடலாம் என பச்சை கொடி காட்டியுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, எப்போதுமே கட்சியில் சீனியர்க்ளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஒரே மாவட்ட செயலாளர்னு புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதும், மக்கள் மத்தியில் திமுக என்றாலே குடும்ப அரசியல் தான் என நினைக்கும் அளவுக்கு எண்ண வச்சிருக்கு. அதுமட்டுமல்லாமல் மாவட்டசெயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு கூட அடுத்தகட்ட குடும்ப அரசியலை கொண்டதாகவே திமுக உருவாகி வருவதாக, வாய்ப்பு கிடைக்காத திமுக விசுவாசிகளே அதிருப்தியில் இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கு. இப்படியே போனால் சொந்த கட்சிகாரங்களே நமக்கு ஓட்டு போடாம போய்டுவாங்கனு… ஐ பேக் டீம் ஸ்டாலின் காதுல நல்லா கேக்குற மாதிரி சொல்லி இருக்காங்களாம்.

அப்படியா சங்கதி என கொஞ்சம் நேரம் யோசனை செய்த ஸ்டாலின் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறாராம்.

அதன் படி, மயிலாடுதுறை, பாளையங்கோட்டை, ஏற்காடு, திருநெல்வேலி, நாங்குநேரி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் புது முகங்களுக்கு தான் இந்த முறை வாய்ப்பாம். அதுமட்டுமல்ல.. இந்த சீனியர் சொன்னாரு .. அந்த சீனியர் சொன்னாரு… இந்த ஜூனியருக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னாருன்னு…சிபாரிசு பேசுற பாட்ஷா எல்லாம் இனி பலிக்காதுன்னு கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பல புது முகங்களை களத்தில் இறக்கவும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், முடிவு செய்துள்ளாராம் ஸ்டாலின்

ஆக..PK கொடுத்த ஐடியா எந்த அளவுக்கு ஒர்க்கவுட் ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

error: Content is protected !!
Open chat