April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் நிதி நிறுவனம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை 

ஆட்டோவை பறிமுதல் செய்ததால் நெல்லையில் நிதி நிறுவனம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை 

 

தீக்குளித்த டிரைவர் பரிதாபமாக இறந்தார். ஆட்டோவை பறிமுதல் செய்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பழனிவேல் (36). ஆட்டோ ஓட்டி வந்தார். இதற்காக அவரது உறவினர் பெயரில் நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக நிதி நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் கயத்தாறு சென்று ஆட்டோவை பறிமுதல் செய்து வந்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை நெல்லை சந்திப்பிற்கு வந்த பழனிவேல் ஆட்டோவை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஆட்டோ அவர் பெயரில் இல்லாததால் நிதி நிறுவனத்தினர் ஒப்படைக்க மறுத்து உள்ளனர். இதனால் விரக்தியடைந்த பழனிவேல் நிதி நிறுவனம் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்து பழனி வேலை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பழனிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!
Open chat