May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

“விசாகா கமிட்டி” அமைக்காதது பெண் காவலர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது”

 

காவல்துறையில் நிரந்தரமாக “விசாகா கமிட்டி” அமைக்காதது பெண் காவலர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது”

அண்மைக் காலமாக அரசு மற்றும் அரசு சார்பற்ற அனைத்து துறைகளிலும் மேல்மட்டம் தொடங்கி கீழ் மட்டம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், பாலியல் சீண்டல்களும் அதிகரித்து வருவது கவலை கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அவ்வாறு அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் சீண்டல்களுக்கு உள்ளாகாமல் தடுக்கவும் அது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளில் #விசாகாகமிட்டி அமைக்கப்பட வேண்டும் என 2013லேயே சட்டம் இயற்றப்பட்டும் அது முறையாக கடைபிடிக்கப்படாதது சட்டத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏனெனில் மக்களின் நண்பன் என சொல்லப்படும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வேலியே பயிரை மேய்ந்த கதையாக தொடர்ந்து வருவது ஆரோக்யமானதல்ல.

கடந்த 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி க்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் அது தொடர்பாக பெண் அதிகாரி பலமுறை உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் 2018 ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் அலுவலகம், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் அளித்த போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவே தமிழக அரசு அவசர அவசரமாக மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்தது.

சீனியர் பெண் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட வேண்டிய அக்கமிட்டியில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள் இருக்க வேண்டும் என்பதும், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை எடுத்துக் கையாண்ட அனுபவம் மிக்கவர்கள் அக்கமிட்டியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் அச்சட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் அப்போது அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதே நமது மிகப் பெரிய குற்றச்சாட்டாகும்.

மேலும் வெறும் பெயரளவிற்கு மட்டுமே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி செயல்படாமல் இருந்த காரணத்தால் தான் கீழ்மட்ட அளவில் நடைபெற்று வந்த பாலியல் தொந்தரவுகள் உயர் மட்டம் வரை புற்றுநோயாக பரவாயிருப்பதும், காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பான சிறப்பு டிஜிபியாக பதவி வகித்த ராஜேந்திர தாஸ் அவர்களே அந்த இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையில் அக்கமிட்டி நிரந்தரமாக அமைக்கப்படாதது பெண்காவலர்களின் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதிலும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையிலேயே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்கதையாக இருப்பதும், அதனை தடுக்க வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனைக்குரியது.

தற்போது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் ராஜேந்திர தாஸ் மீது வெறும் பணியிடை மாற்றம், தற்காலிக பணி நீக்கம் என்றில்லாமல் பதவி நீக்கம் என்கிற வகையில் தண்டனையை அதிகப்படுத்துவதோடு, தற்போது இவ்விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி முறையான விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா..? என்பதை தமிழக அரசு உறுதி செய்வதோடு அக்கமிட்டி நிரந்தரமாக செயல்பட கூடிய வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி
(மாநில செயலாளர்)
மக்கள் நீதி மய்யம், தொழிலாளர் நல அணி.

error: Content is protected !!
Open chat