கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்கு சரத்குமார் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல்
சமக தலைவர் சரத்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 1989 முதல் 1996 வரை இரண்டு முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவருமான திரு தா.பாண்டியன் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது
மாணவ பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தங்களால் ஈர்க்கப்பட்டவர் கொள்கை பிடிப்போடு தனது இறுதிநாள் வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்
தோழர் திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், அரசியல் இயக்கத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்