April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் தகவல் தேர்தல் விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தகவல் தேர்தல் விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது

தேர்தல் 2021 – திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தகவல்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களை திருமணம் மற்றும் இதர அரசியல் அல்லாத விழாக்களுக்கு மட்டும் வாடைகைக்கு அனுமதிக்கலாம்.

திருமண மண்டபங்களை தனி நபர்களுக்கோ,அன்னதானம் வழங்கவோ,பொதுக்கூட்டங்கள் நடத்திட எக்காரணம் கொண்டும் வாடைகைக்கு அனுமதிக்க கூடாது.

திருமண மண்டபங்களை வாடகைக்கு அளிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின அனுமதி ஆணை பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கா.காயத்திரி சுப்பிரமணியம் அலுவலக அலைபேசி எண் :04174_234488,7598000418

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.விஜயா அலுவலக அலைப்பேசி எண் :04174_244255,9443203564

ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.லட்சுமி அலுவலக அலைப்பேசி எண் :04179_242499,9842862424

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகார்க் அலுவலக அலைப்பேசி எண் :04179_220088,9445000418

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் பொது இடங்களில்,தனியார் இடங்களில் போஸ்டர் ஒட்டவோ,சுவர் விளம்பரம் எழுதவோ அனுமதி கிடையாது.

கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட உரிமையாளரின் அனுமதி பெறவேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat