April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமைநெல்லையில் நடைபெற்றது இதில் நெல்லை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து முகநூல் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முகநூல் நண்பர்கள் குழுவை சேர்ந்த ரெட் சோன் உள்ளாடை தமிழக விற்பனை மேலாளர் கணபதி மாரியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளரும் பாளையங்கோட்டை தொழிலதிபரும் வழக்கறிஞருமான முருகப்பன் அவர்கள் நலிந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த மோகன்தாஸ் சுந்தர காந்தி டேனியல் ஆசீர் பாளையங்கோட்டை பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழு டேவிட் ராஜா சிறப்பாக செய்திருந்தார்.

error: Content is protected !!
Open chat