April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மயிலாடுதுறையில் மதிமுக போட்டியிட்டால் கரையேறுமா

மயிலாடுதுறையில் மதிமுக போட்டியிட்டால் கரையேறுமா ?

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக ஆர்வம் காட்டி வருகிறது.கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, அதிமுக கூட்டணியில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு, தொகுதிக்கு புது முகமான காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமாரிடம் தோற்றுப் போனது. மதிமுக சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞரும், வழுவூர் ஊராட்சி மன்றத் தலைவரும், வழுவூரில் பிரபல குடும்பமான மாணிக்க படையாட்சி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம் படையாட்சி மகன் மகாலிங்கம் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2006இல் மதிமுகவில் இருந்த நிர்வாகிகளில் 90% தற்போது அக்கட்சியில் இல்லை .10 சதவீத நிர்வாகிகள் மட்டுமே மீதம் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் போட்டியிட தொகுதிக்கு வெளியே இருக்கிற இரண்டு பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஒருவர் ஆடுதுறையை சேர்ந்த முருகன்.மதிமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக உள்ளார். வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மீது கொலை வழக்கு கொலை முயற்சி வழக்குகள் என பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல மற்றொரு மதிமுக விருப்ப வேட்பாளரான மார்க்கோணி, சீர்காழியை சேர்ந்தவர். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் மீதும் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறதாம். ரியல் எஸ்டேட் பிசினஸில் மோசடிப்புகாரும் இவர் மீது சுமத்தப்படுகிறது. சீர்காழி தாண்டி இவருக்கு எந்த அறிமுகமும் கிடையாது.

மயிலாடுதுறை தொகுதியில் மதிமுக சார்பில் வெளியூரிலிருந்து வந்து போட்டியிட்டால் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாகும். மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தரான மகாலிங்கம், மதிமுக வலுவாக இருந்த 2006இல் வெற்றி பெற இயலாத நிலையில், தற்போது வலுவற்ற மதிமுகவில் வெளியூர் வேட்பாளர்கள் போட்டியிட்டால் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் மயிலாடுதுறைவாசிகள். எனவே தொகுதியை மதிமுகவிற்கு கொடுக்காமல் திமுகவே நல்ல வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது

error: Content is protected !!
Open chat