April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய‌ துணை பாதுகாப்பு படையினர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய‌ துணை பாதுகாப்பு படையினர்.

தேர்தல் பாதுகாப்பு பணியினை பலப்படுத்த இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து இறங்கிய மத்திய‌ துணை பாதுகாப்பு படையினர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் பாதுகாப்பிற்காக மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்பு படையினர் 28.02.2021 அன்று ஒரு துணை தளவாய் தலைமையில் 84 பேர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து இறங்கினார்கள்.

மேலும் பாதுகாப்பை பலப்படுத்த இன்று திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒரிஸா மாநிலம் 151 பட்டாலியனை சேர்ந்த மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் உதவி தளவாய் திரு ராக்கேஷ் குமார் அவர்கள் தலைமையில் 84 பேர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து இறங்கினார்கள். இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS..,அவர்கள் உத்தரவுபடி மாவட்ட‌ காவல்துறை சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை ஆய்வாளர் திரு மரிய கிளாஸ்டன் ஜோஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.பின் அவர்களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டு அனைவரும் ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் துணை ராணுவப் படையினரை உட்கோட்ட வாரியாக பிரித்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat