January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021- முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.03.2021) வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ யொட்டி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாசல் மற்றும் வாக்குச்சாவடி அறையின் நுழைவு ஆகிய இடங்களில் உடனடியாக சாய்வுதளம் அமைக்க வேண்டும், மற்றும் தளங்கள் சமன் செய்யப்பட வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 1:10 என்ற விகிதத்தில் சாய்வுதளம் அமைந்துள்ளதை AEE Pwd/ AD Panchanyat உறுதிப்படுத்த வேண்டும்.
தங்கள் சட்டமன்றத்தொகுதிகளில் உள்ள அனைத்து Pwd வாக்காளர்களையும் சரிபார்த்து அவற்றின் உண்மை தன்மையை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
சக்கர நாற்காலி பயனர்கள் எளிதில் வாக்கு அளிக்கும் வண்ணம் போதுமான இடத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
சக்கரநாற்காலியில் வரும் ஊனமுற்ற வாக்காளர்கள் சிரமமின்றி வாக்கு அளிக்கும் வண்ணம் குறைவான உயரத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.
PWD வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் வழங்கப்படுவதை SVEEP விழிப்புணர்வு மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கம் அளிப்பதற்காக கைப்பேசி எண்: 94436-21416 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் குறித்த கண்காணிப்புக்குழுவை சட்டமன்றத்தொகுதி வாரியாக அமைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திரு.முருகேசன் (தேர்தல்), திரு. சேக் அப்துல் காதர் (பொது), வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சண்முகம், முடக்கியல் வல்லுநர் மரு.பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat