January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் 

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (29.03.2021) வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ யொட்டி, 5-சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கினை பெற்று வரும் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், மற்றும் நுண்பார்வையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 12னு படிவத்தில் விண்ணப்பம் செய்துள்ள தகுதியான அனைத்து 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவருக்கும் தொகுதி வாரியாக வாக்குச்சீட்டு தயார் செய்யப்பட்டு வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு செய்திட 41 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுவினர் 30.03.2021, 31.03.2021 ஆகிய இரண்டு நாட்களில் மேற்படி வாக்காளர்களுக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து வருவர். வாக்குப்பதிவு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்களுக்கு இது தொடர்பான விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)திரு.மு.சேக் அப்துல் காதர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.முருகேசன், வட்டாட்சியர் (தேர்தல்)திரு.சண்முகம், ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

error: Content is protected !!
Open chat