December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தொடர் வருமான வரி சோதனை குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தொடர்ந்து தேர்தல் நேரத்தில் திமுகவை குறி வைத்து இப்படிப்பட்ட பூச்சாண்டி வேலைகள் காட்டுவதால் தி.மு.க பயப்படபோவதில்லை. இதுவரை ஏ.வ.வேலு, ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெறுவது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுவதாகும்.

சிறைச்சாலைக்கும் ஐ.டி. ரெய்டுக்கும் நாங்கள் பயந்திருந்தால் திமுக மேல் இந்நேரம் புல் முளைத்திருக்கும். அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat