April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வருமான வரி சோதனை; தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்!

வருமான வரி சோதனை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

இன்று ஒரே நாளில் திமுகவினரின் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் பின்வருமாறு:-

இன்று ஒரே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி, அண்ணா நகர் திமுக எம்.எல்.ஏ.வின் மகன், தஞ்சை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முரசொலி மற்றும் நிர்வாகிகள் சிலரது வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை முழுக்க முழுக்க அரசியல் நோக்கமுடையது.

இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாகவும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகளாகவும் உள்ளன. தோல்வி பயத்தினால் மத்திய பாஜக அரசு திமுகவின் மீது வருமான வரித்துறையினரை ஏவி விடுகிறது.

எனவே, மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கோ அல்லது திமுகவின் மரியாதையை கெடுப்பதற்கோ இந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று ஆளும் பாஜகவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat